Thursday, October 01, 2009

ஏதோ மோகம் - பாகம் 5



என் மனதில் தோன்றிய குழப்பமான எண்ணங்கள் முகத்திலும் பிரதிபலித்ததை கண்ட ராதா, “ஒண்ணுமில்லை நீங்களும் சைதாப்பேட்டை வெஸ்ட்லயிருந்துதான் வரதா சேகர் அண்ணன் சொல்லுச்சு. எங்க வீடும் உங்க வீட்டுக்கு பக்கத்துலதான்” என்றாள்.”புரியலீங்களே” என்றேன்.


”இல்லை எங்க ஆபிஸ் பாரிஸ்ங்கிறதால வழக்கமா சைக்கிளை சைதாப்பேட்டை ஸ்டேசன்ல போட்டுட்டு எலெக்ட்ரிக் டிரெயின்ல போயிடுவேன். ஆபிசும் பீச் ஸ்டேசன்ல இருந்து நடக்கிற தூரம்தான். ஆனா இங்க வரதுக்கு கிண்டி ஸ்டேசன்ல இறங்கி ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கு. எதிர்வெயில் வேற. ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதான் காலையில லேட்டாயிடுச்சு. அதான் நீங்க தப்பா நினைக்கலைன்னா கோர்ஸ் முடியற வரை உங்ககூட பைக்ல வந்துடுவேன். நீங்க சரின்னு சொன்னப்புறம்தான் சேகர் அண்ணாட்டே சொல்லணும்.” என்றவளிடம் “உங்களுக்கு பிரச்சினையில்லைன்னா எனக்கொண்ணும் கஷ்டமில்லை” என்றேன்.


“ரொம்ப தேங்ஸ். நான் போய் சேகர் அண்ணாட்ட சொல்லி உங்ககிட்ட பேசச்சொல்றேன். நாம இதுகுறித்து பேசுன மாதிரி காட்டிக்கவேண்டாம்” என்று கூறிச் சென்றாள். ஐந்து நிமிடம் கழித்து சேகர் என்னிடம் வந்து அவள் கூறிய விவரங்களை கூறி “உதவமுடியுமா” என்றான். அவளிடம் கூறியவாறே அவனிடமும் சொன்னேன். உடனே அவளையும் அழைத்து வந்து “உனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லைன்னா சார் பைக்ல கூட்டிட்டு போறேன்னுட்டார்.” என்றான். “அவளும் ரொம்ப தேங்ஸ்ங்க” என்றாள். அதற்குள் தேநீர் இடைவேளையும் முடிய அனைவரும் அரங்கினுள் சென்றோம்.


அதன்பின் அவ்வப்போது அவளைப் பார்த்தபோது அவள் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. மாலை ஐந்து மணிக்கு பயிற்சி முடிந்து அனைவரும் கிளம்பினர். அவளிடம் “நீங்க வாசல்ல வெயிட் பண்ணுங்க நான் பைக் ஸ்டாண்ட் போய் பைக்கை எடுத்திட்டு வந்திடுறேன்” என்று கூறி சென்றேன். அவளும் மற்றவர்களிடம் விடைபெற்று வாசலுக்கு வந்தாள்.பைக்கை நன்றாக துடைத்து எடுத்து வருவதற்குள் அனைவரும் சென்றுவிட்டனர்.அவள் மட்டும் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.

அவளருகே வந்து பைக்கை நிறுத்தியவுடன் ஏறி அமர்ந்தாள். முதல்முதல் பழக்கமில்லாத இளம்பெண்ணுடன் செலவது ஒரு மாதிரியாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல. ஏதும் பேசாமல் வந்தவள் “சேகர் அண்ணா ஏதும் தப்பா நினைச்சிறக்கூடாதுன்னுதான் நாம பேசின மாதிரி காட்டிக்கவேண்டாம்னு சொன்னேன்” என்றாள். “அதுவும் சரிதான்” என்றவாறு சாலையை கவனித்தவாறு வண்டியை ஓட்டத்தொடங்கினேன். சின்னமலை, சைதை மேம்பாலம் தாண்டி ஜோன்ஸ் சாலை வழியாக சென்றேன்.

“ரயில்வே ஸ்டேசன் சைக்கிள் ஸ்டாண்ட்ல என்னோட சைக்கிள் கிடக்குது. போகும்போது எடுத்துட்டு போகணும். என்னைய ஸ்டேசன் பக்கத்துல விட்டுடுங்க” என்றாள்.

( தொடரும் )


10 comments:

நாமக்கல் சிபி said...

நான் தான் 1

மெகா சீரியல் மேகநாதன் said...

சபாஷ்! கன்னித்தீவை விட சின்ன சின்ன பார்ட்டா போடுறீங்க! உங்களை வெச்சி ஒரு 15 வருஷத்துக்கு சீரியல் எடுக்கலாம்னு இருக்கேன்!

Raju said...

ம்ம்..தொடரட்டும்.. நல்லாத்தான் போகுது.

Jerry Eshananda said...

தொடர்கிறோம்.

தங்கராசு நாகேந்திரன் said...

தொடரட்டும் தொடர்கதை
நாவல் படிப்பதைப் போன்று மிக சுவராசியமாக உள்ளது

அ. நம்பி said...

பிறகு...?

லோகு said...

ஒரு நாள் நடந்த சம்பவத்தை ஒரு மாதமாக எழுதி கொண்டு இருக்கீங்க.. பிரமாதமான எதிர்காலம் இருக்கு.. சன் டிவி ல ஸ்லாட் வாங்கிடலாம்..

லோகு said...

அது ஜோக்குக்கு...

கதை நடை நிஜமா நல்லா இருக்கு... படிக்க படிக்க ஆர்வம் அதிகமா இருக்கு.. அடிக்கடி எழுதுங்க..

பிரபாகர் said...

ம்... நன்றாக போகிறது ராஜா... சீக்கிரம் உங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.... மிகவும் ஆவலாய் இருக்கிறேன்...

vasu balaji said...

நல்லா போகுது ராஜா. இன்னும் கொஞ்சம் கூட கொடுக்கலாமே.