Thursday, February 16, 2017

சுவாமி சங்கிலி பூதத்தார் துதி பாடல்


சட்டநாதா, சங்கிலிபூத ஐயா
சங்கடமெல்லாம் நீக்கும் ஐயா


மலைபோல் வரும் துன்பமெல்லாம்
பனி போல் விலக்கும் ஐயா

மலை மேல் ஏறி வந்தோம்
மனஅமைதி தாரும் ஐயா

மாசி மாதம் பிறந்ததையா
மன்னாதி மன்னன்
மகேசன் புதல்வன்
உன் அருளால்  மக்கள்
காசி போகும் பலன் கிடைத்ததையா


தண்டம் ஏந்தி நிற்கும் ஐயா
தங்கள் பிள்ளை நாங்கள்
தவறேதும் செய்தாலும்
தண்டனையின்றி தாங்கும் ஐயா

தளர்ந்து சாயும் நேரம்
தாங்கி பிடிக்கும் ஐயா

மக்கள் அகம் முகம்
மலர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் ஐயா  

கருவூலம் காக்கும் ஐயா
எங்கள் குறை நிர்மூலம் செய்யும் ஐயா

குழப்பத்திரை நீக்கி
குழந்தை போல் காக்கும் ஐயா

பழிக்கும் பகை போக்கி
பலன் பல தாரும் ஐயா

அமிர்தபால ஐயா அடியவர் எங்களுக்கு
எப்போதும் உன் ஆளுமை வேண்டும் ஐயா

உன்னை அறிந்த பிள்ளை எம்மை
ஊரறிய உன்புகழ் பாடி
உவகை கொள்ள செய்யும் ஐயா

ஷேத்ரபால ஐயா உம் பிள்ளை நாங்கள்
தேசம் எங்கு சென்றாலும்
சேதம் ஏதும் இன்றி நல்ல சேதி
பல சிறப்புடனே தாரும் ஐயா

நாங்கள் நம்பும் தெய்வம்
எத்தனையோ என்றாலும்
கூட இருந்தே காக்கும்
குடும்பதெய்வம் நீயே ஐயா

சிலையாய் நின்று சிரிக்கும் ஐயா
நிலையாய் உனக்கு ஏவல் செய்வோம் ஐயா

களையாய் காவல் கொண்டு காக்கும் ஐயா
உயர்வாய் உன் புகழ் சொல்வோம் ஐயா

சட்டநாதன், சங்கிலிபூதம் 
சரணம் போற்றி போற்றி

அமிர்தபாலன், அருள்நாதன்
அபயம் போற்றி போற்றி

தண்டநாதன், ஷேத்ரபாலன்
தவபாதம் போற்றி போற்றி 

3 comments:

சிவபஞ்சவன் said...

ஐயா வணக்கம் இந்த துதிப்பாடல் எதிலிருந்து எடுக்கப்பட்டது...அப்படி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டால் அந்த புத்தகத்தை பற்றிய விவரம் கூறுங்கள்

K.P.SAIKRISHIKAA said...

அருமையான பதிவு ராஜா சார்
மிக்க நன்றி
இன்னும் நிறைய சங்கிலி பூதத்தார் குறித்து
பதிவு செய்ய அய்யன் அருள் உங்களுக்கு உண்டு
எஸ் பிச்சுமணி
பழைய பேட்டை

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை...