Tuesday, February 21, 2017

ஸ்ரீ ஸ்வாமி சங்கிலிபூதத்தாரின் தியான ஸ்லோகம் மற்றும் விருத்தம்


*

அருள்மிகு  ஸ்ரீ ஸ்வாமி சங்கிலிபூதத்தாரின் முழுமையான தியான ஸ்லோகம் மற்றும் விருத்தம்*

பரிவார தேவதாக்கள் வரவு :

ஸ்ரீ பூதத்தார் வரவு பாடல்:

த்யானம் :

க்ருஷ்ணாபம் பீம தம்ஷ்ட்ரம்
ப்ரகடித வதனம் ரக்த நேத்ரம் கதாந்தே
ஸ்வயம்பாஹம் ப்ரஸார்ய ப்ருதுதரகதயா
ஸோத்ருதம் தக்ஷபாஹூ
அத்ரீந்த்ராகார ரூபம் மணிமகுடதரம்
பூஷணைர் பாஸமானம்
பீமம் பீமாட்டஹாஸம் ப்ரணத பயஹரம்
ஸ்ரீ பூதநாதம் நமாமி



விருத்தம் :

நீருண்ட மேகமது போலவே திருமேனியழகும்
நீண்டு வளர் மீசையழகும்

நெற்றியில் கஸ்தூரி திலகமும் மணி மகுடமும்
நேர் புருவ விழியினழகும்

பார் கொண்ட நவரத்னம் ஒளிர் பொற்பதக்கமும்
பல் வரிசை போல் அழகும்

பகைவரை வெல்லவே பிடித்திடும்
கதையுடன் பெருவிழி சிவந்த அழகும்

நேர் கொண்ட கச்சையது கட்டியே
ஜரிகையுடன் நின்று வளர் பாதமழகும்

நித்யமும் பக்தர்களை வாழ்கவென்று வாழ்த்தும்
நிறைந்த சங்கிலியின் அழகும்

சீர் கொண்டடிக்கடி சிரித்து அட்டஹாஸம் செய்யும்
சிறந்த முகஸோபை அழகும்

ஸ்ரீ லலிதை காணவே ஜெய பூத நாதனும்
தெருவில் வரும் பவனி பாரீர்


இடியிடி வாள் மின்ன
இடமலை பூதத்தானும்
கொடுமுடி மலையிலேறி
கூவி ஆர்ப்பாட்டம் செய்ய

வெட்டிடும் கொடுவாள் ஏந்தி
வெறிக்கலி முதலாயுள்ள
மலையடி கூடிச் சென்று
வணங்கினார் தலைவர் முன்னே

நவரச சேனைக்கெல்லாம்
நாயகன் ஸ்ரீ பூத நாதன்
சிவ ரெங்க மாலா போற்றி

தேச ப்ரதேசம் செய்ய
எவரெங்கே போனாலென்ன
என்று ஈ வண்ணம் ஸேனை
விவரங்களோடு கூட
விரவினால் வருவாரென்று

கட மலை யானை சூழ
காந்த மலையில் அய்யன்
மட மயில் நடனமேறும்
நல் மகிழ் குளத்தூரய்யன்
பவனி வரும் காட்சி பாங்குடன் பகருவேனே

காந்தமலை வாழ்கின்ற
மணிகண்டர் மந்திரியாய்
கயிலையில் உதித்த மெய்யன்
காரணமாய் வெகு கோடி
பூதகண ஸேனைகள்
கலி கொண்டு மாளுமய்யன்
மலை வாஸ ஏழைகளை காக்கவே


*சங்கிலி வலக்கரம் பிடித்த மெய்யன்*
அந்தமாய் வாமகரம் தன்னிலே
கதையும் அழகாய் தரித்த மெய்யன்
ஆரும் நிகர் என்னாமல் மாநிலம்
ஆள்கின்ற அரும்பணி தரித்த மெய்யன்

மந்தஹாஸமுடை பல்லொடு கிரீடமுடன்
மா லலிதை மகிழ்ந்த மெய்யன்
மஹாமேரு நிகரான மதயானை மீதினில்
மன்னன் இவர் வரவு பாரீர்.

* மாசி மாத மகாசிவராத்திரி விரதம் இருக்கும் அன்பர்கள், பக்தர்கள் தியானம் பாராயணம் செய்து அருள்மிகு ஐயன் சுவாமி சங்கிலி பூதத்தார் அருள் பெருக.*

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரிங்க ஜி... நன்றி...